வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது: இலக்க தகடற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சிக்கின !!!


யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.


மேலும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 வாள்கள் மற்றும் சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்ட இலக்க தகடற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன 


இதனைடுத்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: