தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலே இராணுவத்தை களமிறக்க காரணம் -கமால் குணரத்தன


ஏதேனும் ஒரு தொற்றுநோய், உயிரிழப்பை ஏற்படுத்துமாயின் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார்.


எனவே அத்தகைய பிரச்சினையை கையாள்வதற்கு தேவையான பகுதிகளுக்கு படையினரை அனுப்புவதே பொருத்தமான நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


தடுப்பூசி கிடைத்தவுடன் சுகாதாரத் துறையினர் போராட்டங்களை மேற்கொண்ட நிலையில் அந்த பணியை மேற்கொள்ளுமாறு படையினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார் என்றும் கமால் குணரத்ன தெரிவித்தார்.


அந்த தீர்மானதிற்கு அமையவே பாதுகாப்பு படையினர் முன்னின்று இந்த சவால்களை வெற்றிகொள்ளும் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதாக அவர் குறிப்பிட்டார்.


ஆரம்பத்தில் 2,500 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இராணுவத்தின் தலையீட்டை அடுத்தே ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும் அத்தகைய பணிக்காக மருத்துவத்தில் அனுபவம் வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற இராணுவ ஊழியர்களையே ஈடுபடுத்தியதாகவும் கமால் குணரத்ன தெரிவித்தார்.

No comments: