தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு - முழு விபரம்


நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.


அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.


இன்று (27) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கலந்துரையாடலின் போதே குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.


அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.


எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு நாடு முடக்கல் நிலையில் இருக்க வேண்டுமானால், நாட்டில் உள்ள அனைவரும் அதிக தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கான உரையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

No comments: