இலங்கை தமிழ் அகதிகளுக்காக ரூ .317 கோடி ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின்


தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் நலனுக்காக 317 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.சட்டையின் அறிவித்துள்ளார்.


இன்று சட்டமன்றத்தில் பேசிய அவர், இலங்கை தமிழ் அகதிகளுக்கு ஒழுக்கமான மற்றும் சிறந்த வாழ்வாதார வாய்ப்புகளை தனது அரசாங்கம் உறுதி செய்யும் என கூறினார்.


அதன்படி இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு 5 கோடி ரூபாயும் கல்விக்காக 1 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.


மேலும் இலங்கை தமிழர் நலனுக்காக ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் என 30 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிவித்துள்ளார்.


அத்தோடு அகதி முகாம்களில் பாழடைந்த நிலையில் இருந்த 7,469 வீடுகளை புனரமைக்க 231 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றார்.


அத்தோடு பொறியியல் படிப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில், முதல் 50 மாணவர்களின் அனைத்து கல்விச் செலவையும் அரசாங்கமே ஏற்கும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

No comments: