முடக்க கட்டுப்பாடுகளை நீடியுங்கள் - அரசாங்கத்திடம் ரணில் கோரிக்கை


நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்க கட்டுப்பாடுகளை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


வைத்தியர்களின் ஆலோசனையின் படி, தற்போதைய நாடளாவிய முடக்கம் போதுமான காலத்துக்கு விதிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக நாட்டை முடக்கி மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.


ஆகவே முடக்கத்தை இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீடிக்க அரசாங்கம், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


கடந்த 20 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் நாட்டினை மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பதற்கு சுகாதார அதிகாரிகளும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: