இனிமேல் 100,000 ரூபாய் அபராதம் - அரசாங்கம் எச்சரிக்கை


நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்பர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதன்படி இதுவரை 2,500 ரூபாயாக இருந்த அபராத தொகை ஒரு இலட்சம் ரூபாயாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேவேளை எரிவாயு நிறுவனங்களின் விலை அதிகரிப்பு கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


இதனை அடுத்து அவர்கள் இறக்குமதிகளை மட்டுப்படுத்தியதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

No comments: