தேவை ஏற்படின் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அரசாங்கம்


நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படாத நிலையில் தேவை ஏற்படின் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடனான முடக்கம் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


இருப்பினும் நாட்டின் நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் வட்டார தகவல்கள் தெரிவித்தன.


கடந்த வெள்ளிக்கிழமை திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் சில கட்டுப்பாடுகளை வலுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தபோதும் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவில்லை.


இந்நிலையில், நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


அடித்தோடு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

No comments: