கடந்த நான்கு நாட்களில் பதிவு செய்யப்படாத 4,484 நோயாளிள் அடையாளம் - 4 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று..!


இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400,000 ஐ கடந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.


அதன்படி கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து 400,000 க்கும் அதிகமான நோயாளிகள் உறுதிசெய்த 60 வது நாடாக இலங்கை மாறியுள்ளது.


கடந்த நான்கு நாட்களில் பதிவு செய்யப்படாத 4,484 நோயாளிகளை இணைத்து சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு புதிய தரவை வெளியிட்டுள்ளது.


அதன்படி நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 403,285 ஆக அதிகரித்துள்ளது.


இதற்கிடையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 2,163 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 348,930 ஆக உயர்ந்துள்ளது.


அதன்படி, 46,605 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 7,750 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: