ரஷ்யாவில் இருந்து மேலுமொரு தொகை ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இலங்கைக்கு...!


ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து மேலும் 120,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (19) காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.


அதிகாலை 1.52 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறித்த தொகுதி தடுப்பூசிகளுடன் விமானம் தரையிறங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


1,450 கிலோ எடையுள்ள குறித்த தடுப்பூசிகள் விசேட வாகனம் ஊடாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


குறித்த தடுப்பூசிகள் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதலாவது டோசை பெற்றுக் கொண்ட கண்டியில் வசிப்பவர்களுக்கு இரண்டாவது டோஸாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: