நாளை முதல் ஜப்பான் செல்ல இலங்கையர்களுக்கு அனுமதி


இலங்கை உள்ளிட்ட கறுப்பு பட்டியலிலுள்ள 6 நாடுகளின் பயணிகள் ஜப்பான் செல்லவதற்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா,  மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று பரவலை அடுத்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜப்பான் சில நாடுகளுக்கு தடை விதித்திருந்தது.


இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி முதல் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: