நவம்பரில் 3 மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மீண்டும் பல்கலை ஆரம்பம்


நவம்பர் மாதத்திற்குள் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


ஒக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை 2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான மதிப்பெண்கள் ஒக்டோபர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

No comments: