முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க ஆளும்தரப்பு கோரிக்கை !!


இலங்கையில் அமுலில் உள்ள முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு ஆரமப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே கேட்டுக்கொண்டுள்ளார்.


இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகேயின் ஆராச்சியை மேற்கோளிட்டே அவர் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.


கொழும்பு மாவட்டத்திற்குள் 14% கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், இந்த எண்ணிக்கை மக்கள் தொகையில் குறைந்தது 9 மடங்கு அதிகம் என்பதை இந்த ஆராய்ச்சி நிரூபிக்கிறது என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


டெல்டா மாறுபாடு அதிகரித்து வருவதால், எத்தனை நோயாளிகள் இருக்கலாம் என்பதை கணிக்க முடியாது என்றும் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.


இலங்கையில் கடந்த 20 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி நீக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: