25 முஸ்லிம் மௌவிகளுக்கு எதிராக வழக்கு: மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் நியமனம்


2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட நீதிமன்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 25 முஸ்லிம் மௌவிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


குறித்த வழக்கு விசாரணைக்காகவே உயர் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையிலான மூவரடங்கிய் விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டுள்ளது.


குறித்த நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

No comments: