நவம்பர் முதல் அமெரிக்காவுக்கு பயணிக்கலாம் - வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்


கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐரோப்பா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா அரசாங்கம் நிபந்தனையுடன் நீக்கியுள்ளது.


அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அனைத்து நாடுகளிலும் உள்ள பயணிகள் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முடியும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.


எனினும் வருகைத்தரும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.


அதன்படி பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் கிரீஸ் உட்பட ஐரோப்பாவில் உள்ள 26 ஷெங்கன் நாடுகள், பிரித்தானியா, அயர்லாந்து, சீனா, இந்தியா, தென்னாபிரிக்கா, ஈரான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.


அமெரிக்கா அல்லாத வேறுநாட்டு பயணிகளுக்கு குறிப்பாக முதன்முதலில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் 2020 ஜனவரியில் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் விதிக்கப்பட்டது.


இருப்பினும் கனடா மற்றும் மெக்ஸிகோவுடனான தரைவழி மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக ஒக்டோபர் 21 வரை விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது குறித்து எந்த அறிவிப்பையும் அமெரிக்கா வெளியிடவில்லை.

No comments: