தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயம் ? அமைச்சர் கெஹலிய


தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


சட்டரீதியான விடயங்கள் உட்பட, அத்தகைய நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கான அனைத்து விடயம் குறித்தும் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.


மேலும் தடுப்பூசி அனைவருக்கும், முழுமையாக செலுத்தப்பட்ட பின்னரே இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.


இதேவேளை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை விரைந்து முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

No comments: