நாட்டை திறப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன - இராணுவ தளபதி


ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நாட்டை  திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


கண்டியில் ஊடக சந்திப்பில் பேசிய அவர், பொதுப் போக்குவரத்து சேவைகள் உட்பட பல்வேறு சேவை குறித்து தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.


மேலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை தயாரிக்குமாறும் அனைத்து அமைச்சுக்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


நாட்டில் தற்போது தினமும் சுமார் 1,000 நோயாளிகள் பதிவாகும் அதே வேளையில் 50 முதல் 75 இறப்புகள் பதிவாகின்றன. 


எனவே அடுத்த இரண்டு நாட்களுக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவை அறிவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.


அத்துடன்  தடுப்பூசி பெறாதவர்கள் பொது இடங்களில் நடமாடுவதற்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து எந்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

No comments: