தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார் அலி சப்ரி


அநுராதபுரம் சிறைச்சாலையில் அண்மையில் இராஜாங்க அமைச்சரினால் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நீதி அமைச்சர் அலி சப்ரி நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.


இந்த அச்சுறுத்தல் சம்பவமானது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்லவென தமிழ் அரசியல் கைதிகள் புரிந்துகொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.


அத்தோடு இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.


இதேவேளை பாதுகாப்பு தொடர்பிலோ அல்லது சிறைச்சாலை வசதிகள் தொடர்பாகவோ எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்றும் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும்  அமைச்சர் தெரிவித்தார்.


அநுராதபுரம் சிறைச்சாலையில் பாதுகாப்புப் பிரச்சினை இருக்குமாக இருந்தால், உயர் பாதுகாப்பு இடத்துக்கு அனுப்ப முடியும் என தான் அவர்களிடம் கூறியதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

No comments: