யாழில் இளம் ஊடகவியலாளர் கொரோனா தொற்றால் காலமானார்


யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த 26 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் என்ற ஊடகவியலாளர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வந்த மாற்று திறனாளியான அவருக்கு நேற்று (01) கொரோனா தொற்று உறுதியானது.


இதனை அடுத்து வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு திடீரென சுவாசச் சிரமம் ஏற்பட்ட நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.


26 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷின் மறைவுக்கு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


2019 இல் சமூக ஊடகங்கள் மூலம் சமூகத்திற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கான பங்களிப்பை பாராட்டி அவருக்கு ரவிராஜ் நினைவு விருதும் வழங்கப்பட்டது.

No comments: