பிக் பொஸ் பட்டம் வென்ற நடிகர் மாரடைப்பால் மரணம்


பிக் பொஸ் பட்டம் வென்ற 40 வயதான நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் இன்று (02) மும்பையில் காலமானார். 


ஹிந்தி பிக் பொஸ் 13 ஆம் பருவ நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் சுக்லா பட்டம் வென்றிருந்தார்.


ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா, இரு படங்களில் நடித்துள்ளார். 


2008 இல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்த அவர் பிறகு 2014 இல் பாலிவுட்டில் அறிமுகமானார்.


சித்தார்த் சுக்லாவின் மரணத்துக்கு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No comments: