ஊரடங்கு நேரத்தில் யாழில் வாள்வெட்டு சம்பவம் - விசேட அதிரடிப்படையும் குவிப்பு !


யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இதன் காரணமாக அந்தப் பகுதியில் நேற்று பிற்பகல் 7 மணியளவில் சிறிது நேரம் பதற்றநிலை காணப்பட்டதாகவும் பின்னர் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்துபவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட குழுவே ஊரடங்கு வேளையில் இவ்வாறு தாக்குதலை நடத்தியுள்ளது.


இந்நிலையில், சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அத்தோடு, சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: