கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் தலைமையகம் - அரசாங்கம்


கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.


அத்தோடு அதற்குரிய அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சீனாவிற்கு உறுதியளித்துள்ளார்.


சீன சபாநாயகருடன் நேற்று இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின் போதே நிதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.


மேலும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவின் ஆதரவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது கோரியுள்ளார்.


இந்நிலையில் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் உட்பட மற்ற முதலீடுகளை சீனா செய்யும் என சீன சபாநாயகர் கூறினார்.


மேலும் நெருங்கிய நண்பராக இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தனது முழு ஆதரவை வழங்குவதாக சீன சபாநாயகர் உறுதியளித்தார்.

No comments: