இலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் / பூஸ்டர் ஷாட்: இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்


இலங்கையர்களுக்கு மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் ஷாட் வழங்குவது குறித்து இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


தேவைப்பட்டால் மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.


இரண்டாவது டோஸைப் பெற்ற பின்னர் மூன்றாவது டோஸை செலுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறினார்.


அதேநேரம் நிபுணர்களின் பரிந்துரைகளை பரிசீலித்த பின்னர் கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் ஜனாதிபதி இறுதி முடிவை எடுப்பார் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

No comments: