சர்வதேசம் முன்பாக தேசிய பாதுகாப்பை உறுதி செய்த ஜனாதிபதிக்கு ஜே.வி.பி. பாராட்டு


ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் சர்வதேச சமூகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய உறுதிமொழியை வரவேற்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.


இன்று (23) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.


எவ்வாறாயினும், நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான முதல் படி ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாக தண்டிப்பது என்றும் அவர்சுட்டிக்காட்டினார்.


இதேவேளை சர்வதேச சமூகத்தின் முன் ஜனாதிபதி உறுதியளித்த போதிலும், இன மற்றும் மத பேதம் நாட்டில் பல்வேறு கட்சிகளால் விதைக்கப்படுகின்றன என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

No comments: