நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வதிரி, இரும்பு மதவடியில் இன்று (06) முற்பகல்,வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு, பண உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கானோர் வரிசையில் திரண்டனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அறிந்த நெல்லியடிப் பொலிஸார், அங்கு சென்று பண உதவி வழங்கியவர் உட்பட மூவரைக் கைது செய்து மேலாதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
