அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி கோட்டா


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.


செப்டம்பர் 21 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த விஜயம் மிகவும் முக்கியமானது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடந்த ஊடக சந்திப்பில் கூறியிருந்தார்.


குறிப்பாக ஜெனீவா, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாடு விமர்சனங்களை எதிர்கொள்ளும் நேரத்தில், இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.


பொருளாதாரத்தின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தாமல் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

No comments: