நாட்டுக்குள் மற்றொரு திரிபு வருவதற்கு வாய்ப்புள்ளது - எச்சரிக்கின்றார் இராஜாங்க அமைச்சர் !


நாட்டுக்குள் மற்றொரு திரிபு  வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.


இந்நிலையில், மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டார்.


அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதை விடுத்து, பேதங்களை மறந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

No comments: