கிருசாந்தி படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு !


யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தி படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 25 ஆண்டு நிறைவடைந்துள்ளது.


இதனை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் உள்ள தமிழ்த் தேசிய கட்சியின் அலுவலகத்தில் அதன் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.


1996 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியில் உயர்தர மாணவியான 18 வயதான கிருசாந்தி வீதியால் சென்று கொண்டிருந்தார்.


இதன்போது செம்மணி பகுதியில் இருந்த இராணுவ முகாம் அருகில் வழிமறித்த இராணுவத்தினர் அவரை சித்திரவதை செய்திருந்ததுடன் பின்னர் படுகொலை செய்திருந்தனர்.


இந்த சம்பவம் இடம்பெற்றபோது கிருசாந்தியோ அல்லது அவரைத் தேடிச்சென்ற தயார் உள்ளிட்ட மூவருமோ வீடுதிரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments: