திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு வரம்பு.. இரவுநேரத்தில் ஊரடங்கு...!


ஒக்டோபர் முதலாம் திகதி முதல் திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகள் மற்றும் பொது கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகல் விதிக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


குறித்த புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாள நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்த வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி குறைந்த எண்ணிக்கையிலானவர்களின் பங்கேற்புடன் வீடுகள் மாத்திரமே நிகழ்வுகளை நடத்த அனுமதியை வழங்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.


மேலும் இறுதிச் சடங்குகள் மற்றும் பல பொதுக் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகல் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, ஊரடங்கு நீக்கப்பட்டு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஒக்டோபர் முதலாம் திகதி நாடு மீண்டும் திறக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று அறிவித்திருந்தார்.


கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாட்டை மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இரவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


அதன்படி, தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: