புலிகள் மீது விசாரரணையை நடத்தும் கடிதத்தை அனுப்பவில்லை... தேசிய தலைவரால் உருவாக்கப்பட்டதை பிளவடைய விடமாட்டேன்


புலிகள் மீதும் விசாரணையை வலியுறுத்தும் எந்தவொரு கடிதத்தையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழரசுக் கட்சி சார்பாக அனுப்பப்படவில்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.


யாழில் நேற்று  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஒரு சிலரை தாக்குவதாக நினைத்துக் கொண்டு தமிழரசுக் கட்சியை தாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.


தமிழரசுக் கட்சியை ஓரங்கட்ட நினைப்பது பகல் கனவு என்றும் எவராலும் அக்கட்சியை அழிக்க முடியாது என்றும் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.


மேலும் கூட்டணியில் உள்ள பங்காளி காட்சிகள் விலகுவதனால் அதை தாங்கள் தடுக்க முடியாது என்றும் ஆனால் அவர்கள் அவ்வாறான ஒரு முடிவை எடுக்கமாட்டார்கள் என கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதனால்  அது உடைந்து போவதை தான் தனிப்பட்ட முறையில் விரும்ப மாட்டேன் என்றும் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.

No comments: