நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை


நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றினை எதிர்த்துப் போராடும் இந்த சூழலில் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட அரசாங்கம் இடமளிக்காது என்றும் அவர் கூறினார்.


பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.


மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாட்டில் புரையோடி காணப்பட்ட பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை விடுவிக்க முடிந்தாலும் கொரோனா தொற்றின் ஊடாக மற்றொரு பாதுகாப்பு அச்சுறுத்தலை நாடு எதிர்கொண்டுள்ளதாக கூறினார்.


இந்நிலையில் தேசிய பாதுகாப்பின் ஸ்திரத்தன்மையிலேயே அபிவிருத்தி தங்கியுள்ளது என்றும்  கமால் குணரத்ன தெரிவித்தார்.

No comments: