ஜனாதிபதி கோட்டா அதிகாரத்திற்கு வருவதற்கு ஆதரவு வழங்கவில்லை - கர்தினால்


தற்போதைய பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையோ ஒருபோதும் ஆதரிக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.


அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தை மட்டுமே விமர்சித்ததாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றி அறிந்திருந்தாலும் அதைத் தடுக்கவில்லை என்பதனால் அந்த நேரத்தில் இருந்த அரசாங்கத்தை மட்டுமே தாம் விமர்சித்ததாக அவர் கூறினார்.


கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே பேராயர் இதனைத் தெரிவித்தார்.


அந்த நேரத்தில் எந்த ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க கூட அவர்கள் தயாராக இருக்கவில்லை என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.


முன்னதாக இதே ஊடக சந்திப்பிலேயே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்பதோடு விசாரணை குறித்தும் அதிருப்தியும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (CBC TAMIL)

No comments: