கர்ப்பமடைவதை தாமதப்படுத்துங்கள் - தம்பதிகளிடம் முக்கிய கோரிக்கை


கொரோனா வைரஸின் டெல்டா திரிபு பரவுவதால் பெண்கள் தாங்கள் கர்ப்பம் தரிப்பதை  ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு காதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.


டெல்டா திரிபு பரவுவதால், தாய் மற்றும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மகளிர் மருத்துவ நிபுணர் மருத்துவர் ஹர்ஷ அத்தப்பத்து இதனைத் தெரிவித்துள்ளார்.


கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையின் எதிர்காலம் என்பதால் இந்த முடிவை கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்றார்.

No comments: