பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு பச்சைக்கொடியை காட்ட மறுக்கும் அதிகாரிகள்..!
நாட்டின் தற்போதைய சூழலில், பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அனுமதியை வழங்க சுகாதர அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது.


கல்வி அமைச்சினால் உருவாக்கப்பட வேண்டிய ஆக்கபூர்வமான திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது.


அத்தகைய திட்டம் தயாரிக்கப்பட்ட பின்னரே சுகாதார அதிகாரிகள் இந்த விடயம் குறித்து தீர்மானிப்பார்கள் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

No comments: