மக்கள் அச்சமடையத் தேவையில்லை - அரசாங்கம்


நாட்டில் உணவு பற்றாக்குறை இல்லை என்றும் போதிய கையிருப்பு இருப்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.


உணவுப் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.


இந்நினையில் பதுக்கி வைத்துள்ள பொருட்களை அடையாளம் காண்பதற்காகவே அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது.


இதேவேளை வேகமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சீனி மற்றும் அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


அதன்படி, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலையாக 130 ரூபாய் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


பொதிசெய்யாமல் விற்கப்படும் ஒரு சீனியின் அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபாய் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


அவ்வாறே, கீறி சம்பா அரிசி கிலோ ஒன்றுக்கு 136 ரூபாயும் ஒரு கிலோ வெள்ளை சம்பா அரிசிக்கு 101 ரூபாயும் ஒரு கிலோ வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையாக 101 ரூபாயும்பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


அத்துடன், வெள்ளை (நாடு) அரிசி கிலோவொன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 94 ரூபாயும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

No comments: