தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா? - சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்


நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிப்பது குறித்த முடிவு நாளை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியால் இந்த முடிவு எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.


குறித்த ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கொரோனா தொற்று நோயாளிகள் மற்றும் இறப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.


கடந்த திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை குறித்த உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

No comments: