ரத்வத்தவிற்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க சரத் வீரசேகர உத்தரவு


லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவுறுத்தியுள்ளார்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைபாடுகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


செப்டம்பர் 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைக்குச் சென்று கைதிகளை மிரட்டியமை தொடர்பாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை இடம்பெறவுள்ளது.


அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் குறித்து முறைப்பாடுகள் கிடைத்தால் மட்டுமே விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என சரத் வீரசேகர நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: