ஊரடங்கு உத்தரவு ஒக்டோபர் வரை நீடிப்பு


நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.


ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.


இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் அனுமதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

No comments: