யாழிற்கு விஜயம் செய்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்


இலங்கைக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் யாழ். மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்யவுள்ளார்.


இலங்கையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் அவரது இந்த விஜயம் அமைந்துள்ளது.


இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.


அதேபோல் இலங்கையின் வெளிவிவகார செயலாளருடன் அவர் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் அவர் எதிர்வரும் தினங்களில் கண்டி, மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: