ஆரம்பப் பிரிவுக்கான கற்றல் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் - திகதி அறிவிக்கப்பட்டது


கற்றல் நடவடிக்கைகளுக்காக 200க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவினை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, ஆரம்பப் பிரிவுக்கான கற்றல் நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க இன்று இடம்பெற்ற சந்திப்பில் மாகாண ஆளுநர்கள் முடிவு செய்துள்ளனர்.


நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்ட நிலையில் அதன் ஒருபகுதியாகதரம் 1 முதல் 5 வரை 3884 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

No comments: