இலஞ்ச ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு


பன்டோரா ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்த இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


உடனடியாக விசாரணை நடத்தி, ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் இஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார்.


இன்று (06) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை உறுதிப்படுத்தினார்.


பன்டோரா பேப்பர்ஸில் பெயரிடப்பட்டுள்ள ஆவணத்தில் தற்போதைய இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவரான திருக்குமார் நடேசன்  ஆகியோர் அதில் பெயரிடப்பட்டுள்ளனர்.


எவ்வித முறைப்பாடுகளும் இதுவரை வழங்கப்படாத நிலையில் இந்த விடயம் குறித்து விசாரணையை தொடங்க முடியவில்லை என ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: