பாடகர் கணேஷ்குமார் சங்கீதனை விடுதலை செய் - வவுனியாவில் போராட்டம்


பயங்கரவாத தடை சட்டத்தில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் கணேஷ்குமார் சங்கீதனை விடுதலை செய்யக்கோரி வவுனியாவில் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


போராட்டத்தின் போது தமிழர்களின் குரல்களை அடக்காதே, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் சொல் என கோரி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


அரசாங்கத்தை பாதுகாக்கும் எந்த புதிய சட்டமும் வேண்டாம் என்றும் கோஷங்களை எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இந்த போராட்டத்தில் மக்களோடு மக்களாக தமிழ் அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.