சுரேஷ் சல்லேவுக்காக எழுந்து நில்லுங்கள் - கொழும்பில் போராட்டம்
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர், சுரேஷ் சல்லேக்கு ஆதரவாக கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்திற்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
அவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான நடவடிக்கைகளை கண்டித்து, பல எதிர்க்கட்சிகளால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான பிரதிநிதிகள் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
