11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு : ரவீந்திர விஜேகுணரத்னவுக்குஅழைப்பாணை


11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் போர்க்குற்றவாளி எனக் கூறப்படும் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.


கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.


இந்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.


அதன்படி அவரை எதிர்வரும் ஜூலை 27 அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.