1254 கோடி ரூபாய் முதலீட்டில் 10 ஆயிரத்து 330 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கக் கூடிய தொழில் திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் தொழில் தொடங்க ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகள் குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் அறிந்து கொள்ளும் நிகழ்ச்சியை சென்னை கிண்டியில் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, சென்னை - பெங்களூரு இடையே தொழில் வழித்தடம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள கொரிய நாட்டைச் சேர்ந்த ஹானர், ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
பின்னர் தமிழ்நாட்டில் வர்த்தகம் புரிதல் என்ற கையேட்டை முதல்வர் பழனிசாமி வெளியிட தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத் பெற்றுக் கொண்டார்.
0 Comments