திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் மூழ்கி மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

பதுளை, ஹாலியெலவில் இருந்து சுற்றுலா சென்ற மாணவர்களே நேற்று மாலை 6 மணியளவில் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் ஹாலியெல பகுதியிலுள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்விகற்பவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு கோமரங்கடவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.