சக நாடுகளுடன் இணைந்து ஐ.நா. தீர்மானத்தை திரும்ப பெற அமைச்சரவை அங்கீகாரம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்தை சக நாடுகளுடன் இணைந்து திரும்பப் பெற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இதற்கு அங்கீரம் வழங்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.தமிழ் செய்தி சேவையினால் அறிய முடிகின்றது.

அதன்படி, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் இது குறித்த ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டில் இந்த தீர்மானம் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

No comments: