ஜேர்மனியில் இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்: 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஜேர்மனியின் ஹனோவ் நகரில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், தாக்குதலுக்கான காரணங்கள் தெளிவாக தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

No comments: