கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 2,009 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று மற்றும் புதிதாக 136 இறப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,000 ஐ எட்டியுள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டும் கொடூரமாக மாறியுள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,009 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 136 பேர் உயிரிழந்தாகவும், 1749 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 74,185 ஆக அதிகரித்துள்ளது.

No comments: