யாழ். சர்வதேச விமானப் பயணிகளின் கட்டணத்தை குறிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை

யாழ்ப்பாண சர்வதேச விமானத்தினூடாக பயணிக்கும் பயணிகளின் அதிகரித்த கட்டணத்தைக் குறைக்குமாறு தெரிவித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு யாழ் வணிகர் கழகத்தின் உபதலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் இந்திய நாணயத்தை இலங்கையில் மாற்றுவதற்கேற்ற வசதியையும் பயணத்தின்போது எடுத்து செல்வதற்கான வசதியை ஏற்படுதுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற வசதிகள் இங்கே இல்லை எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இப்படியான பல வசதி குறைபாடுகளுடன் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணிக்கும் பயணி ஒருவருக்கு அதிகளவான கட்டணத்தினை அறவிடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என யாழ் வணிகர் கழகத்தின் உபதலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே பயணிகளின் விமானச்சீட்டுக்களின் விலையினை குறைத்து அவர்கள் பயன்பெற தாங்கள் ஆவன செய்யவேண்டுமென அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: