கர்ணன் ஷூட்டிங்கில் இருந்து தனுஷ் வெளியிட்ட போட்டோவில் தளபதி..

தனுஷ் கர்ணன் சூட்டிங்கில் இருந்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட போட்டோவில் ரஜனி நடித்த தளபதி பட புகைப்படம். !!


தனுஷ் தற்போது சற்றும் இடைவெளி விடாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஜகமே தந்திரம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தன் அடுத்த படமான கர்ணன் படத்தையும் கிட்டத்தட்ட நடித்து முடித்துவிட்டார் அவர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புதிய புகைப்படத்தினை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தனுஷ்.
அந்த போட்டோவில் தனுஷ் ஒரு குதிரையுடன் நின்றிருக்கிறார். மேலும் அவரது T சர்டில் தளபதி ரஜினியின் புகைப்படமும் உள்ளது.
படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்து விட்டது. கூடியவிரைவில் கர்ணன் ஷூட்டிங் முடிந்ததும் தனுஷ் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments: